மனசோர்வு, குழந்தை இன்மை உள்ளிட்ட பல வியாதிகளைப் போக்கும் அற்புத மலர்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
சங்குப்பூ:
சங்குப்பூ என்றழைக்கப்படும் காக்கரட்டான் மலரை நாம் வெளிப்புறங்களில் தோட்டத்தில் பார்த்திருப்போம். கண்ணைக்கவரும் நீல நிறத்தில் பூக்கும் இப்பூ நம் மனதிற்கு குளிர்ச்சி தரக்கூடியது. இது மூன்று வகைகளில் இருக்கிறது. அவை வெள்ளை காக்கரட்டான், நீல காக்கரட்டான், அடுக்கான காக்கரட்டான் ஆகும்.வெள்ளை காக்கரட்டான் மலர் சிவனுக்கு விருப்பமான மலர்களில் ஒன்று. இதன் வேரிலிருந்து விதைகள் வரை முழுவதும் பல மருத்துவ பயன்கள் நிறைந்துள்ளது .
மருத்துவ பயன் :
இலையை மஞ்சளுடன் சேர்த்து பயன்படுத்தினால் கட்டி, வீக்கம் கரையும். மிளகு சேர்த்து கொதிக்கவைத்து கசாயம் செய்து குடித்தால் சளி கோழை நீங்கும். இதனை பக்குவமாக பயன்படுத்த வேண்டி உள்ளதால் உட்கொள்ளும் முன்னர் மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டியது அவசியம். பெண்ணுறுப்பு போல் இம்மலர் உள்ளதால் மாதவிடாய் சிக்கல், குழந்தையின்மை சிக்கல், சிறுநீர் தொற்று களைச் சரி செய்கிறது. இம்மலர் மனச்சோர்வு,மனக்கவலை உடலில் தோன்றும் அமிலத்தன்மை ஆகியவற்றை நீக்க வல்லது.
சங்கு பூவின் நன்மைகள்:
இந்த சங்கு பூவினில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளதால் உடலில் உள்ள உயிர் அணுக்கள் சேதம் அடைவதை பெருமளவு தடுத்து நம்மை ஆரோக்கியத்துடனும், சருமத்தை இளமையுடனும் தோன்ற உதவுகிறது. மூச்சுத் திணறல், இதய சம்பந்தமான நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. தாய்லாந்து, சீனா உள்ளிட்ட பல ஆசிய நாடுகளில் இந்த உணவை நட்சத்திர உணவகங்களிலும், ராயல் உணவகங்களிலும் பரிமாறப்படும் உணவுகளில் இந்த மலர் சேர்க்கப்படுகிறது.