சுண்டைக்காய் கோழையகற்றியாகவும் வயிற்றுப் பூச்சிக் கொல்லியாகவும் செயல்படுகிறது..
காச நோய் இருப்பவர்கள் தினமும் 20 சுண்டை வற்றலை சிறிது நல்லெண்ணெயில் வறுத்து சாப்பிட்டால் நோய் கட்டுப்படும் .அதேபோன்று சுண்டைக்காய் சிறுநீரை பெருக்கும் தன்மையுடையது கல்லீரல் மண்ணீரல் நோய்களை நீக்க உதவுகிறது.
பால் சுண்டைக் காயைச் சமைத்து உண்ணக் கபக்கட்டு ,ஈளை ,காசம்,, இருமல் மூலச்சூடு, மூலக்கடுப்பு, திமிர்ப்பூச்சி, முதலியன தீரும்.
சுண்டைக்காயை உப்பு கலந்த புளித்த மோரில் 2 முறை ஊறவைத்து காயவைத்து எண்ணெயில் வறுத்து இரவு உணவில் பயன் படுத்தி வர மார்புச்சளி ,ஆஸ்துமா, காச நோய், தீருவதுடன் வயிற்றுப்போக்கும் நின்றுவிடும்.
சுண்ட வற்றல் ,மிளகு, சீரகம், வெந்தயம், கருவேப்பிலை ,இவற்றை இளவறுப்பாய் வறுத்து உப்பு சேர்த்து சூரணித்து உணவில் கலந்து சாப்பிட்ட பசி மந்தம், சுவையின்மை ,மலக்குடல் கிருமிகள் ,ஆகியவை தீரும்.
சுண்டை வற்றல், நெல்லி வற்றல், சுக்கு, வெந்தயம் ,ஓமம் ,மாதுளை ஓடு ,மாம்பருப்பு, கருவேப்பிலை, சீரகம், இவற்றை வறுத்து இடித்து சூரணம் தயாரித்து. காலை மாலை 2 சிட்டிகை உண்டு வரவேண்டும்இவ்வாறு தினமும் செய்தால் வயிற்றில் உள்ள கிருமிநாசினிகள் அனைத்தும் நீங்கி பசியைத் தூண்டும் வகையில் இருக்கும்.