Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

பனைமரம் நம் உடலுக்கு இவ்வளவு நன்மைகளை கொடுக்குதா.!! ஆச்சர்யம்.!!

பனை மரத்தில் எண்ணற்ற மருத்துவ பயன்கள் உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. அதிலுள்ள பணம்பழம், நுங்கு, பதநீர் போன்றவற்றின் மருத்துவ பயன்கள் குறித்து இத்தொகுப்பில் காண்போம்

நுங்கை தோள்கள் சாப்பிட்டுவர சீதக் கழிச்சல் விலகும்.

தோல் நீக்கி நுங்கு நீரை தொடர்ந்து சாப்பிட்டு வர கோடை காலத்தில் ஏற்படும் வேர்குரு நீங்கும்.

பனங்கிழங்கிற்கு  உடல் குளிர்ச்சியை உண்டாக்கும் தன்மை உண்டு. தொடர்ந்து உட்கொண்டு வந்தால் உடல் அழகு பெறும் உடல் பலமும் அதிகரிக்கும்.

சுண்ணாம்பு சேர்த்து எடுக்கப்படும் பணம் சாருக்கு பதநீர் என்று பெயர் .

மேக  நோய் இருப்பவர்கள் இதை தொடர்ந்து 40 நாட்கள் அருந்தி வந்தால் நோய் தீரும்.

பதநீரில் இருந்து எடுக்கப்படும் கருப்பட்டி பனங்கற்கண்டு ஆகியவற்றுக்கும் பதநீரில் உள்ள நோய் தீர்கும் குணங்கள் உண்டு.

பனை வெல்லத்துடன் சுக்கு மற்றும் நிலக்குமிழ் சம அளவு எடுத்து கொண்டு குடிநீர் தயாரிக்க காய்ச்சல் மந்தம் மேகநோய் ஆகியவை நீங்கும்.

பனை ஓலையின் பின்னப்பட்ட பாயில் படுத்து வந்தால் கண்நோய்கள் அகன்றுவிடும் பனை ஓலையால் செய்யப்பட்ட விசிறிகளை பயன்படுத்துவோருக்கு வாதம் பித்தம் கபம் சம்பந்தப்பட்ட நோய்கள் வராது.

Categories

Tech |