குழந்தைகளுக்கு உலர்ந்த திராட்சை கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றிய தொகுப்பு.
பல வகையான சத்துகளும் ஆரோக்கியமும் நிறைந்த ஒன்றாகவே உலர் திராட்சை காணப்படுகின்றது. காரணம் உலர்திராட்சையின் வைட்டமின்கள், கார்போஹைட்ரேட்கள் மற்றும் தாதுக்கள் அதிக அளவில் இருக்கின்றன. உலர்ந்த திராட்சையை குழந்தைகளுக்கு கொடுக்கலாமா? கொடுக்கக் கூடாதா? என்ற சந்தேகம் பெற்றோர்கள் மத்தியில் எழுந்து வருகிறது. உண்மையில் உலர்திராட்சை குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தை அளிப்பதில் பெரும் பங்களிப்பை கொண்டது. அவற்றில் சில
- உலர்ந்த திராட்சைகளை குழந்தைகளுக்கு கொடுப்பதினால் அவர்களது மன வளர்ச்சியும் உடல் வளர்ச்சியும் சிறந்த அளவில் இருக்கின்றது.
- பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம் போன்ற தாதுக்கள் உலர்ந்த திராட்சையில் அடங்கியுள்ளதால் குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு பெரிதும் உதவி புரிகிறது.
- குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிக்க உலர் திராட்சை ஒரு காரணமாக அமைகிறது.
- உலர் திராட்சையில் இருக்கும் நார்ச்சத்து செரிமானத்திற்கு பெரிதும் உதவி புரிகிறது.
- குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லாத பொழுது உலர்ந்த திராட்சையின் தண்ணீரை கொடுப்பதனால் அது வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுக்கு எதிராக போராட தொடங்குகிறது.