சுந்தரகாண்டத்தை படித்தால் கிடைக்கும் நன்மைகள்
- சுந்தரகாண்டத்தை ஆத்மார்த்தமாக படித்து வந்தால் வாழ்க்கையில் உள்ள துக்கங்கள் மறைந்துபோகும்.
- சுந்தரகாண்டத்தை தொடர்ந்து வாசித்து வந்தால் வாசிக்க வாசிக்க மன வலிமை உண்டாகும்.
- சுந்தரகாண்டத்தை படித்து அனுமனை வழிபட்டு வந்தால் அறிவு, ஆற்றல், புகழ், குறிக்கோளை எட்டும் திறமை, ஆரோக்கியம், வாக்கு சாதூரியம் போன்றவற்றைப் பெறலாம்.
- சுந்தரகாண்டத்தை ஆஞ்சநேயரை நினைத்து வடைமாலை சாத்தி படித்து வந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
- அனுமன் கடலை தாண்டுவதற்கு முன்பு சொன்ன மந்திரத்திற்கு ஜெய பஞ்சகம் என்று பெயர் இதை சொல்லி வந்தால் வீட்டில் செல்வம் பெருகும்.
- சுந்தரகாண்டத்தில் சீதையை கண்டுபிடிக்க அசோக வனத்துக்கு செல்லும் முன்பு கூறிய மந்திரத்தை சொல்லி வந்தால் வெற்றி மீது வெற்றி கிடைக்கும்.
- சுந்தரகாண்டம் படிப்பதன் மூலம் வேதம் சொல்லிய புண்ணியத்தை பெறமுடியும்.
- சுந்தரகாண்டத்தை ஆத்மார்த்தமாக படித்தால் தான் அதன் முழு பலனையும் பெற முடியும்.
- சுந்தரகாண்டத்தை வாசிப்பவர்கள் வலிமை பெற்றவர்களாக திகழ்வார்கள்.
- சுந்தரகாண்டத்தை முழுமையாக படித்து ஏழைகளுக்கு உதவி செய்தால் அதிகப்படியான புண்ணியம் கிடைக்கும்.
- சுந்தரகாண்டம் புத்தகத்தை வாங்கி பதினோரு பேருக்கு படிக்க கொடுத்தால் யாகம் செய்ததற்கான பலன் கிடைக்கும்.