சமையலில் அவ்வப்பொழுது பயன்படுத்திவரும் எள்ளில் இருக்கும் மருத்துவ தன்மைகள் பற்றிய தொகுப்பு
- உணவில் அதிகம் எள் சேர்ப்பவர்கள் தோல் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படாது. எள்ளில் இருக்கும் எண்ணெய் தோலின் பளபளப்பு தன்மைக்கு உதவிபுரிகிறது.
- அசைவ உணவு எடுத்துக் கொள்ளாதவர்கள் எள் சாப்பிட்டு வருவதனால் உடலுக்கு தேவையான இரும்புச்சத்து கிடைக்கப்பெற்று உடல் பலம் பெறும்.
- எள்ளை உணவில் சேர்த்துக் கொள்வதனால் எலும்புகள் பலம் பெறும். மூட்டு தேய்மானம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாது.
- ஆஸ்துமா நோயாளிகள் மூச்சு விடுவதில் சிரமம் கொள்வார்கள். இவர்கள் தினமும் எள் சாப்பிட்டு வருவதனால் மூச்சுவிடுவதில் சிரமம் இருந்து வந்தால் சரியாகும்.
- வெட்டுக்காயங்கள் இருந்தால் எள் சாப்பிட்டு வருவதன் மூலம் விரைவில் ஆறும்.
- போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தினமும் எள் சாப்பிட்டு வந்தால் சிகரெட் மது போன்ற போதை பொருட்களில் இருந்து விடுபட முடியும்.