இந்துப்பு உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கப்பெறும் நன்மைகள் பற்றிய தொகுப்பு
இமய மலையின் அருகில் கிடைக்கப்பெற்று இந்திய உப்பு என பெயர்பெற்று நாளடைவில் மருவி இந்துப்பு என பெயர் பெற்றது. அதன் நன்மைகள்
- வெந்நீரில் உப்பு கலந்து வாய் கொப்பளித்து வந்தால் பல் வலி, வாய் துர்நாற்றம், ஈறு வீக்கம் போன்ற வாய் தொடர்பான பிரச்சினைகள் தீரும்.
- சருமம் இளமையாகவும் அழகாகவும் இருக்க இந்துப்பு அற்புதமான மருந்தாக இருந்து வருகிறது.
- குளிக்கும்பொழுது இந்துப்பு கலந்த தண்ணீரில் குளிப்பதனால் உடலுக்கு இரும்புச்சத்தை கொடுக்கிறது.
- ரத்த அழுத்தத்தை சீராக வைக்கவும் இந்துப்பு உதவிபுரிகிறது.
- ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தி சீராக வைத்துக்கொள்ள இந்துப்பு ஒரு காரணமாக அமைகிறது.
- தைராய்டு பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் இந்துப்புவை சமையலில் சேர்த்துக் கொள்வதால் தீர்வு கிடைக்கப் பெறும்.
- மூலிகை மருந்து தயார் செய்வதில் இந்துப்பு சேர்ப்பதால் மருந்தின் வீரியம் வேகமாக வியாதியை குணப்படுத்துகிறது.