Categories
தேசிய செய்திகள்

பெங்களூரு போதை பொருள் வழக்கு மேலும் 14 நாட்கள் நீதிமன்றக் காவல்..!!

பெங்களூரு போதைப்பொருள் வழக்கில் நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி, தொழிலதிபர் ராகுல் ஆகியோரின் ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்த சிறப்பு நீதிமன்றம் மேலும் 14 நாட்கள் அவர்களை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகை ராகினி திவேதியை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து நடிகை சஞ்சனா கல்ராணி, தொழிலதிபர் ராகுல் ஆகியோரை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

மூன்று பேரும் நீதிமன்ற காவலில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி, தொழிலதிபர் ராகுல் ஆகியோர் ஜாமீன் கோரி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மூன்று பேரின் ஜாமீன் மனுக்களை நிராகரித்த சிறப்பு நீதிமன்றம் மேலும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அவர்களை சிறையில் அடைக்க உத்தரவிட்டது.

Categories

Tech |