Categories
தேசிய செய்திகள்

பெங்களூரு வெள்ளத்தில் கார்கள் அடித்து செல்லப்படும் காட்சிகள்…!!

கர்நாடகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் நேற்று பெங்களூருவில் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

தெலுங்கானா ஆந்திரம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் தொடர்ந்து பெய்த மழையால் வெள்ளம் ஏற்பட்டு பலர் பலியாகிறார்கள். கர்நாடகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் பெங்களூர் நகரில் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொம்மனஹள்ளி, பேயூர், மடிவாளா, ஜெயநகர், சாந்திநகர், ராஜாஜி நகர் அப்பால், லால்பாக், மைசூர் சாலை உட்பட நகரின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்தது. வெள்ளத்தில் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் அடித்துச் செல்லப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

Categories

Tech |