Categories
உலக செய்திகள்

ரஷ்ய விமானங்களுக்கான உரிமங்களுக்கு தற்காலிக தடை… பெர்முடா அறிவிப்பு…!!!

பெர்முடா, இங்கிலாந்து பகுதியில் ரஷ்ய விமானங்களுக்கான உரிமங்கள் நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

ரஷ்யா, உக்ரைன் நாட்டில் தொடர்ந்து 18-ஆம் நாளாக போர் தொடுத்து வருகிறது. இத்தாக்குதலை எதிர்த்து உலக நாடுகள் ரஷ்யாவிற்கு பல தடைகளை விதித்து வருகின்றன. இந்நிலையில் ரஷ்யா மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளால் இங்கிலாந்து நாட்டின்  பகுதியில் உரிமம் வாங்கிய ரஷ்ய விமானங்களின் சான்றிதழை நிறுத்துவதாக பெர்முடா தெரிவித்திருக்கிறது.

இதன் காரணமாக உலகம் முழுக்க இருக்கும் நூற்றுக்கணக்கான ரஷ்ய வணிக விமானங்கள் பாதிக்கப்படும். மேலும், ரஷ்ய நாட்டின் கடற்படைக்குரிய குறிப்பிடத்தக்க பகுதியை தரையிறக்குவது போன்ற முக்கிய விளைவுகளை உண்டாக்கும். இதில் 700-க்கும் அதிகமானவை பெர்முடாவில் உரிமம் வாங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |