அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக ஜனநாயகக் கட்சியினரிடையே நவாடா மாகாணத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் பெர்னி சாண்டர்ஸ் (Bernie Sanders) வெற்றி பெற்றுள்ளார்.
அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்காக ஒவ்வொரு மாகாணங்களிலும் வாக்கெடுப்பு நடைபெற்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாக, தென்மேற்கில் அமைந்திருக்கும் நவாடா மாகாணத்தில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரைத் தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது.
இதில், அக்கட்சியின் மூத்த தலைவரும், வெர்மான்ட் மாகாண பாராளுமன்ற உறுப்பினருமான பெர்னி சாண்டர்ஸ் வெற்றி பெற்றுள்ளார். ஏற்கெனவே 78 வயதாகும் பெர்னி சாண்டர்ஸ், நியூஹாம்ப்ஷைர் மாகாணம் சார்பில் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரைத் தேர்வு செய்வதற்காக கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற போட்டியிலும் வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.