சிசேரியன் டெலிவரி குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
முந்தைய சந்ததியினர் பெரும்பாலானோர் இயற்கை பிரசவம் மட்டுமே கண்டு வந்தனர். ஒரு சிலர் மட்டுமே இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போது அவர்களுக்கு சிசேரியன் முறை மூலம் குழந்தை பிறந்தது. தற்போது பெரும்பாலானோர் சிசேரியன் முறை மூலம் மட்டுமே டெலிவரி செய்கின்றனர். இந்நிலையில் இந்திய-அமெரிக்க நடத்திய ஆய்வு ஒன்றில் சிசேரியன் டெலிவரி குறித்த அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில்,
இயற்கை பிரசவம் மூலம் பிறக்கும் குழந்தைகளைவிட, சிசேரியன் முறையில் பிறக்கும் குழந்தைகளுக்கு சுவாச பிரச்சனைகள், ஜீரணம் தொடர்பான கடுமையான பாதிப்புகள் ஏற்பட அதிகம் வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, 3.2 சதவிகிதம் சிசேரியன் குழந்தைகளுக்கு மேற்கண்ட நோய்கள் உள்ளது கண்டறியப்பட்டது. இதனால் குழந்தைகளின் இறப்பு விகிதமும் அதிகரிக்கிறது. ஆகவே சிசேரியன் முறையை ஒப்புக் கொள்ளும் முன் தாய்மார்கள் சிந்தித்து செயல்பட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.