Categories
சினிமா தமிழ் சினிமா

2018-ன் சிறந்த நடிகை…. தேசிய விருது பட்டியலில் ஸ்ரீபல்லவி…!!

தமிழ் படங்களில் திருநங்கை வேடத்தில் நடித்து பலர் பாராட்டு பெற்றுள்ள நிலையில் ஸ்ரீபல்லவி திருநங்கையாக நடித்து தேசிய விருது பெறவுள்ளார்.

காஞ்சனா படத்தில் சரத்குமார், சமீபத்தில் வெளிவந்த சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதி நடித்த திருநங்கை கதாபாத்திரத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது. இதுபோல் விஜய் ஸ்ரீ இயக்கத்தில் உருவான படம் தாதா 87. இந்த படத்தில் ஸ்ரீபல்லவி திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பொதுவாக திருநங்கை வேடத்தில் நடிகர்கள் தான் நடிப்பார்கள் ஆனால், ஸ்ரீபல்லவி தன்னுடைய இமேஜ் பற்றி கவலைப்படாமல் துணிச்சலாக இந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Related image

அவரது நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் திருநங்கையாக நடித்து பாராட்டு பெற்ற ஸ்ரீபல்லவிக்கு 2018-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகையன  தேசிய விருதுக்கு வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் ‘தாதா 87’ படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |