ஸ்விட்சர்லாந்து நாட்டில் வாழ்க்கைத்தரத்தை அடிப்படையாக கொண்டு சிறந்த மற்றும் மோசமான நகரம் எது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்விட்சர்லாந்து வாழ்க்கைத்தரம் தொடர்பிலான சர்வதேச ஆய்வுகளில் பொதுவாகவே சிறந்த இடங்களில் இருக்கும். ஆனால் தற்போதைய ஆய்வில் அந்நாட்டின் பேசல் நகரம் மட்டும் தான் முதல் பத்து இடங்களுக்குள் வந்திருக்கிறது. இந்த வருடத்திற்கான, பிற நாட்டவர்கள் வாழ சிறந்த நகரங்கள் என்ற பட்டியல் InterNations என்ற அமைப்பால் வெளியிடப்பட்டது.
இதில் 57 நகரங்கள் கலந்து கொண்ட நிலையில், பேசல் நகரம் 9-ஆம் இடத்தைப் பிடித்திருக்கிறது. அதாவது, வேலை வாய்ப்பு தேடி வரும் பிற நாட்டவர்களுக்கு, எவ்வாறான பயன்களை நகரங்கள் வழங்குகின்றன? என்பதை வைத்து வரிசைப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த ஆய்வில் பங்கேற்ற சுமார் 12,420 நபர்களிடம் பணி சூழல், வாழ்க்கை தரம், குடிபெயர்தல், குடியிருப்பு வசதி, உள்ளூர் மக்கள் போன்றவை தொடர்பில் கேள்விகள் கேட்கப்பட்டது.
இதில் பேசல் நகர் தான் அதிக புள்ளிகளை பெற்றிருக்கிறது. பேசல் நகரம் மருந்துவத் துறை, பொது போக்குவரத்து வசதி, வாழ்க்கை தரம், அரசியல் மற்றும் பாதுகாப்பு போன்றவற்றில் முதல் 3 இடங்களை பிடித்தது. ஆனால் நாட்டின் அதிக அளவில் சர்வதேச தன்மையுடைய நகர் என்று கருதப்படும் ஜெனீவா, 47 வது இடத்திற்கு தள்ளப்பட்டது. சுவிட்சர்லாந்தின் நகரங்களிலேயே ஜெனீவா தான் மோசமான இடத்தில் இருக்கிறது.