கேரட் எண்ணெயின் மருத்துவ குணம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
கேரட் எண்ணெயில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் பீட்டா கரோட்டின் சத்து தலை முடிக்கு சிறந்த கண்டிஷனராக செயல்படுகிறது. தற்போது பல இளைய தலைமுறையினர் சந்திக்கும் ஒரு பிரச்சனை, முடி சேதமும் அதனால் ஏற்படும் முடி முடி உதிர்வு பிரச்சனையும் தான். இந்த கேரட் எண்ணெய் கூந்தல் மற்றும் உச்சந்தலையில் ஏற்படும் சேதத்தில் இருந்து பாதுகாக்கிறது.
இது கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன், முடியின் அடர்த்தியையும் உறுதிப்படுத்துகிறது. வாரத்திற்கு இரண்டு முறை தலைக்கு ஷாம்பு தேய்த்து குளிப்பதற்கு முன்னால் கேரட் எண்ணெயை நன்றாக தலையில் தேய்த்து ஊறவைத்து பிறகு குளித்தால் முடி ஸ்மூத்தாக இருக்கும்.