Categories
தேசிய செய்திகள்

“சிறந்த வைப்புநிதி கணக்கு எங்கு தொடங்கலாம்”…? இத பார்த்து தெரிஞ்சுக்கோங்க..!!

முன்பு தபால் நிலையங்களில் மட்டும் வழங்கப்பட்டு வந்த ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தினை தற்போது வங்கிகளும் வழங்கி வருகின்றன.

இதில் எஸ்.பி. ஐ வங்கி இந்த வைப்பு நிதி கணக்குகளுக்கு நல்ல வட்டியை வழங்குகிறது. இந்த ரெக்கரிங் டெபாசிட் கணக்குகளில் தனிநபர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து பணம் செலுத்தி வர வேண்டும். இந்த திட்டங்களுக்கு வட்டி விகிதங்கள் எவ்வளவு? அஞ்சல் அலுவலகம் அல்லது எஸ்.பி.ஐ வங்கி எது சிறந்தது என்பதை பார்க்கலாம்.

எஸ்.பி.ஐ வங்கியில் 1 வருடம் முதல் 2 வருடத்திற்கு வட்டி விகிதம் 4.9% ஆகும். இதே 2 வருடம் முதல் 3 வருடத்திற்கு 5.1% ஆகும். 3 வருடம் முதல் 5 வருடத்திற்கு 5.3% ஆகும். இதுவே 5 வருடம் முதல் 10 வருடத்திற்கு வட்டி விகிதம் 5.4% ஆகும். ஆனால், தபால் நிலையத்தில் இதற்கு நல்ல வட்டி விகிதம் கிடைக்கின்றது. தபால் நிலையத்தில் 5 ஆண்டுகாலக் கணக்கிற்கு 5.8% வட்டி தருகிறது.

Categories

Tech |