ஆசியாவின் மிகப்பெரிய திரைப்பட திருவிழா என்று கருதப்படும் 53-வது சர்வதேச இந்திய திரைப்பட திருவிழா நேற்று கோவாவில் பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்த திருவிழாவில் இந்திய திரை உலகை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில் குறிப்பாக நடிகர்கள் அஜய் தேவ்கன், சிரஞ்சீவி, வருண் தவான், கார்த்திக் ஆர்யன், மனோஜ் வாஜ்பாய், நடிகை சாரா அலிகான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் மத்திய மந்திரி அனுராக் தாக்கூரும் கலந்து கொண்டு பேசினார்.
இந்நிலையில் நடப்பாண்டில் சிறந்த இந்திய திரைப்பட ஆளுமை விருதுக்கு நடிகர் சிரஞ்சீவி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் நடிகரின் சிரஞ்சீவி கிட்டத்தட்ட 4 சதாப்தங்களாக நடிகர், நடன கலைஞர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டு சினிமாத்துறையில் ஜொலிக்கிறார். இவர் ஏறக்குறைய 150 படங்களில் பணிபுரிந்த நிலையில், சிறந்த இந்திய திரைப்பட ஆளுமைக்கான விருதை வழங்குவதில் மகிழ்ச்சி என மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.