உலகம் முழுவதும் உள்ள அனைத்து கிறிஸ்தவர்களாலும் டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படும். இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட மக்கள் தற்போதிருந்தே தயாராகி வருகிறார்கள். இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை சிறப்பாக கொண்டாட உலகின் சிறந்த இடங்கள் எது என்பது குறித்து தற்போது பார்க்கலாம். அதன்படி டென்மார்க்கில் அமைந்துள்ள கோபன்ஹேகன் என்ற பகுதியில் அழகிய அரண்மனைகளும், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கென சில தனித்துவ அலங்காரங்கள் நிறைந்த இடங்களும் இருக்கிறது.
இது குறைந்த செலவில் வெளிநாடு செல்வதற்கு ஏற்ற இடம் ஆகும். அதன் பிறகு அயர்லாந்து நாட்டில் உள்ள டப்ளின் என்ற பகுதியில் கண் கவர் கிறிஸ்துமஸ் அலங்காரங்கள் செய்யப்பட்டிருக்கும். அதே நேரம் இங்கு பனிப்பொழிவினை நேரடியாக பார்க்கும் வாய்ப்பும் கிடைக்கும். இதனையடுத்து ஆஸ்திரியாவில் உள்ள 4-வது பெரிய நகரமான சால்ஸ்பெர்க் பழமை மாறாத கிறிஸ்துமஸ் கொண்டாடங்களுக்கு புகழ்பெற்ற நகரமாக கருதப்படுகிறது. இதனால் கிறிஸ்துமஸ் கொண்டாட இந்த இடமும் ஒரு சிறந்த இடமாக கருதப்படுகிறது. ஜெர்மனியில் உள்ள நியூரம்பெர்க் பகுதியில் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் கிடைக்கும்.
அதன்படி இங்கு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தேவையான பொருட்கள் விற்பனை செய்யும் 180 சந்தைகள் இருக்கிறது. அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் ஒளிரும் விளக்குகள், கிறிஸ்துமஸ் மரங்கள் என மெய் சிலிர்க்க வைக்கும் அழகிய இடங்கள் இருப்பதால், இதுவும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட ஒரு சிறப்பான இடம் ஆகும். ஜெர்மனியில் உள்ள பெர்லின் நகரத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது கிறிஸ்துமஸ் பண்டிகை பற்றிய நிகழ்வுகளை மக்களிடம் எடுத்துரைப்பதற்காக அருங்காட்சியகங்கள் திறக்கப்படும். இத்தாலி நாட்டின் தலைநகரமான ரோம் கிறிஸ்தவ மக்களின் புனித நகரமாக அழைக்கப்படுகிறது.
இங்கு கிறிஸ்துமஸ் பண்டிகையின் மரபு மாறாமல் கொண்டாடப்படும் என்பதால் பலரும் ரோம் நகரத்தை கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட தேர்ந்தெடுப்பார்கள். ஸ்காட்லாந்து நாட்டின் தலைநகரான எடின்பார்க் பகுதி வண்ணமயமான கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு பெயர் பெற்ற இடம் ஆகும். இங்கு புத்தாண்டு பண்டிகை வரை கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் நடைபெறும். மேலும் மேற்குறிப்பிட்ட நாடுகளில் உள்ள நகரங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பான முறையில் கொண்டாடப்படும் என்பதால், பலரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட அங்கு சென்று விடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.