பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அமிதாப்பச்சன். இன்று அமிதாப்பச்சன் தன்னுடைய 80-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவருக்கு பிரதமர் நரேந்திர மோடி உட்பட திரை உலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அமிதாப்பச்சனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், லெஜன்ட் என்னை எப்போதும் ஊக்கப்படுத்திய ஒரு நபர். இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற ஒரு நபர். சூப்பர் ஹீரோ அமிதாப் பச்சன் தன்னுடைய 80-வதூ வயதில் இன்று அடி எடுத்து வைக்கிறார். அவருக்கு என்னுடைய அன்பும் மரியாதையும் கலந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.
The legend.. someone who has inspired me always… the one true sensation and superhero of our glorious Indian film fraternity enters 80 .. happy birthday my dearest and most respected @SrBachchan Amitabh ji .. with lots of love and best regards always ❤️🙏🏻
— Rajinikanth (@rajinikanth) October 11, 2022