முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் ஜி அவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான மன்மோகன் சிங் தனது 87-ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இவரது பிறந்தநாளுக்கு மத்திய மற்றும் மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார் அதில், நமது முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் ஜி அவர்களின் பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள். அவரது நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கைக்காக நான் பிரார்த்திக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
Best wishes to our former Prime Minister Dr. Manmohan Singh Ji on his birthday. I pray for his long and healthy life.
— Narendra Modi (@narendramodi) September 25, 2019