Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கணவனுக்கு துரோகம் : உண்மை தெரிந்ததும் தூக்கில் தொங்கிய மனைவி…. திண்டுக்கல் அருகே சோகம்….!!

திண்டுக்கல் அருகே மனைவி தகாத உறவில் இருந்ததை கணவன் பார்த்துவிட்டதால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்த குஜிலியம்பாறை பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவர் எக்ஸ்போர்ட் கம்பெனியில் டெய்லராக பணியாற்றி வருகிறார். வேல்முருகனுக்கு தனலட்சுமி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் கரூர் கம்பெனிக்கு வேலைக்கு சென்று நீண்ட நேரம் உழைக்கும் வேல்முருகன் அடிக்கடி இரவு தாமதமாக வீட்டிற்கு வந்துள்ளார். கணவர் வீடு திரும்பி வரும்வரை காத்திருக்க வேண்டிய தனலட்சுமிக்கு அப்பகுதியில் உள்ள ரமேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வழக்கம்போல் வேலைக்கு சென்று வேல்முருகன் இரவு வீட்டுக்கு திரும்ப தாமதமாகும் என்று மனைவியிடம் தெரிவித்துள்ளார். அன்று நள்ளிரவு வீட்டுக்கு வந்த வேல்முருகன் நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்கவில்லை. தொடர்ந்து கதவைத்தட்டி கொண்டிருக்க தனலட்சுமி கதவை திறந்து உள்ளே வந்த வேல்முருகன் படுக்கை அறைக்கு சென்று ஆடைகளை காட்டியுள்ளார். அப்போது கீழே குனிந்து பேன்ட் கழட்டும்போது கட்டிலுக்கு அடியில் ரமேஷ் பதுங்கி இருப்பதை கண்டு வேல்முருகன் அதிர்ச்சி அடைந்தார்.

மனைவியின் தகாத உறவை கண்டு ஆத்திரமடைந்த வேல்முருகன் மனைவியையும் ரமேஷ் அடித்துள்ளார். அங்கிருந்து ரமேஷ் தப்பி சென்றுவிட்டார் .சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளார் ரமேஷ் அப்போது நள்ளிரவு 3 மணி என்பதால் காலையில் புகார் அளிக்குமாறு போலீசார் கூறியுள்ளனர். பின்னர் வீட்டுக்கு வந்த வேல்முருகன் மனைவியின் பெற்றோருக்கு போன் செய்து சம்பவத்தை தெரியப்படுத்தியுள்ளார்.

4 மணி அளவில் தனலட்சுமியின் பெற்றோர் மகளின் தகாத உறவை குறித்து கண்டித்துள்ளனர். வீட்டிற்கு சென்று கதவை சாத்திக் கொண்டு தனலட்சுமி மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் தனலட்சுமியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வேல்முருகன் கொடுத்த புகாரின் அடிப்படையில் தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து வருகின்றனர். தகாத உறவு குறித்து தெரிந்ததால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |