Categories
தேசிய செய்திகள்

நண்பனை நம்பி மனைவியை விட்டுச்சென்ற கடற்படை ஊழியர்… திரும்பி வந்த கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

திருமணமான கடற்படை ஊழியர் வேலைக்காக வெளியூர் சென்ற நேரத்தில் அவரின் மனைவியை கடற்படை ஊழியரின் நண்பர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை கொலாபா பகுதியை சேர்ந்த கடற்படை ஊழியர் அவரது மனைவியுடன் வசித்து வருகிறார். அவருடன் திருமணமாகாத மற்றொரு கடற்படை ஊழியரும் தங்கியிருந்துள்ளார். திருமணமான கடற்படை ஊழியர் ஒரு நாள் வேலைக்கு சென்ற நேரத்தில் அவரின் மனைவியும் நண்பரும் மட்டும் இருந்து வந்துள்ளன. ஒருநாள் அந்த நண்பர் நன்றாக குடித்துவிட்டு வந்து உடன் வேலை பார்க்கும் கடற்படை ஊழியரின் மனைவியை கற்பழித்துள்ளார்.

மேலும் இது பற்றி கணவரிடம் கூறினால் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன அப்பெண் கையை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதுகுறித்து அவரது கணவர் விசாரித்தபோது நடந்த அத்தனையும் தெரிவித்துள்ளார். பின்னர் அவர் காவல்துறையில் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் 30 வயது கடற்படை ஊழியரை கைது செய்தனர்.

Categories

Tech |