தாடி மீசை அதிகம் வைத்திருப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் விரைவில் பரவும் என்று அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
சீனா, கொரியா,ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் வேகமாக பரவியும், எந்தெந்த நாடுகளில் கால் வைக்கப் போகிறது என்று உலக நாட்டு மக்களை அச்சத்தில் வைத்திருக்கும் நோய் என்றால் அது கொரோனோ வைரஸ் தான். இந்த நோய் யாரும் எதிர்பாராத விதமாக அதிவிரைவில் பரவி வருகிறது.
இதுவரை 2835 பேர் இந்த நோயால் இறந்து உள்ளனர். இந்நிலையில் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு பிரிவின் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் ஒரு முக்கிய தகவல் தெரியவந்துள்ளது. அதில், தாடி மீசை வைத்து இருக்கும் நபர்களிடம் கொரோனோ மிக அதிகமாக பரவும் என்றும், இந்த நோய் தாக்கம் அதிகம் உள்ள நாடுகளில் மக்கள் முடிந்தளவுக்கு மீசை தாடிகளை கிளீன் ஷேவ் செய்து இருந்தால் நோயிலிருந்து தங்களை ஓரளவு பாதுகாத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.