பெண் ஒருவர் தனியாக நடந்து சென்றுகொண்டிருந்த போது நாய்களால் கடித்து குதறப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவில் டயானா என்ற பெண் ஒருவர் தனியாக தெருவில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு பத்துக்கும் மேற்பட்ட தெருநாய் கூட்டம் இருந்துள்ளது . அப்போது திடீரென்று நடந்து சென்று கொண்டிருக்கையில், 10 நாய்களும் சேர்ந்து டயானாவை சுற்றிவளைத்து கடித்துள்ளது. இதனால் நாய்களிடமிருந்து தப்பிக்க முடியாத அவர் வலியால் அலறி துடித்துள்ளார். அப்போது அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து டயானாவை காப்பாற்றி மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்துள்ளனர். மேலும் காவல் துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.
மிகவும் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட டயானா மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவருடைய முகம் மொத்தமாக சிதைக்கப்பட்டு சதைப் பகுதி முழுவதும் பறிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் அவருடைய உடல் முழுவதுமாக நாய்கள் கடித்து குதறி இருக்கின்றன. இதனால் டயானா அடையாளம் காண முடியாத அளவுக்கு மாற்றியுள்ளார். மேலும் அவர் கோமா நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்தில் இருந்து சுமார் 10 நாய்களை சுட்டுக் கொன்றுள்ளனர்.
நாய்களுக்கு ஏதேனும் தொற்று இருக்கிறதா? என்பதை சோதனைக்கு உட்படுத்தி உள்ளனர். இந்நிலையில் நாய்களிடம் இருந்து டயானாவை காப்பாற்றிய பெண் ஒருவர் கூறுகையில், “நான் வீட்டிற்குள் இருந்த போது அலறும் சத்தம் கேட்டது. உடனே வந்து வெளியில் பார்க்கும் போது, பெண் ஒருவர் நாய்களிடம் சிக்கி போராடுவதைப் பார்த்தேன். உடனே அங்கு சென்று பார்த்தபோது நிர்வாண நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை நாய்களிடமிருந்து மீட்டோம்” என்று கூறியுள்ளார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.