Categories
ஆன்மிகம் இஸ்லாம் கட்டுரைகள் வழிபாட்டு முறை விழாக்கள்

பக்ரீத் பண்டிகை ”தியாகத் திருநாள்” சிறப்பு கட்டுரை …!!

பக்ரீத் பண்டிகை தியாகத் திருநாளுக்கான சிறப்பு கட்டுரை குறித்து இதில் காண்போம்.

பக்ரீத் தியாகத் திருநாள் காலையில் இஸ்லாமியர்கள் வீட்டில் விடிவதற்கு முன்பு எழுந்து புத்தாடை அணிந்து விட்டு தொழுகை நடைபெறும் மைதானத்திற்கு சென்று நல்ல முறையில் தொழுகை செய்துவிட்டு , வீட்டில் வந்து பலகாரங்கள் , இனிப்புகள் செய்து அதை எல்லாம் தெரிந்தவர்கள் , ஏழை எளிய மக்கள் என அனைவருக்கும் கொடுத்துவிட்டு வீடுகளில் வளர்க்கப்பட்ட பிராணிகளான ஆடு , மாடு , ஒட்டகம் போன்ற மூன்றில் ஏதாவது ஒரு பிராணியை இறைவனுக்காக அறுத்துப் பலியிடுவது தான் பக்ரீத் பண்டிகை.

Image result for bakrid

மேலும் அறுத்து பலியிட்டு பிராணியின் கறியை மூன்று கூறுகளாக   பிரிக்கப்பட்டு ஒரு பங்கினை தன்னுடைய சொந்த செலவுக்காகவும் , மற்றொரு பங்கினை தன்னுடைய உறவினர்களுக்கும் , மூன்றாவது பங்கினை ஏழை எளிய மக்களுக்காகவும் பங்கிட்டு அனைவரும் அன்றைய தினத்தில் ரொம்ப சந்தோசமா கொண்டாடக்கூடிய பண்டிகையாக  பக்ரீத் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகின்றது.

Categories

Tech |