Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பாஜக, அமமுக இடையே மோதல்….. காயமடைந்த பாஜகவினர்..!!!

கன்னியாகுமரி விரவநல்லூர் வாக்குசாவடியில் பா.ஜனதா, அமமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. 

தமிழகம் முழுவதும் இன்று நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மக்கள் சுறுசுறுப்பாக தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். மேலும் சினிமா பிரபலங்கள் பலரும் வாக்களித்தனர். இந்நிலையில் கன்னியாகுமரி தொகுதியில் பூதப்பாண்டியை அடுத்துள்ள வீரவநல்லூர் அரசு தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் பா.ஜனதா மற்றும் அமமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

Related image

இந்த வாக்குவாதம் நேரமாக நேரமாக பெரியதாகி இறுதியாக மோதலில் முடிந்தது. இந்த மோதலில் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் பா.ஜனதா கட்சியை சேர்ந்த 5 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Categories

Tech |