பாகுபலி திரைப்படத்தினை மணிரத்தினத்திடம் கொடுத்திருந்தால் நிறைய மிச்சம் செய்திருக்கலாம் என்று பேசப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் மணிரத்னம். எதார்த்தமான கதைகயை மட்டும் தேர்வு செய்து படமாக்கி வரும் இவர் தற்போது பிரம்மாண்ட படங்களை எடுப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் இவர் தற்போது 450 கோடி பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக உருவாகிவரும் ‘பொன்னியின் செல்வன்’ எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராய், அனுஷ்கா, ஐஸ்வர்ய லக்ஷ்மி உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பை 190 நாட்களில் முடிக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில், 400 கோடி பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக உருவான பாகுபலி திரைப்படத்தின் படப்பிடிப்பை ராஜமௌலி 500 நாட்களுக்கு மேல் நடத்தினார். ஒருவேளை இப்படத்தை மணிரத்னத்திடம் கொடுத்திருந்தால் பொருளாதார ரீதியாக நிறைய மிச்சம் செய்து இருக்கலாம் என்று திரை வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.