Categories
அரசியல் மாநில செய்திகள்

RSS சொன்ன பகீர் வாக்குமூலம்…! உடனே தடை செய்யுங்க மோடி… கம்யூனிஸ்ட் பரபரப்பு கோரிக்கை ..!!

முஸ்லீம் இயக்கங்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சமீபத்தில் மராட்டிய மாநிலத்தில், மும்பை நீதிமன்றத்தில்…  ஒரு ஆர்எஸ்எஸ்-யை சார்ந்து இருக்கின்ற தலைவர் ஒரு வாக்குமூலத்தை சமர்ப்பித்து இருக்கிறார். அங்கே ஒரு வழக்கு வருகிறது, ஒரு வெடிகுண்டு தயாரிக்கின்ற போது 2 பேர் இறந்து விடுகிறார்கள், அந்த இரண்டு பேர் இறந்து போன வழக்கு  நீதிமன்றத்திற்கு வருகிறது. அந்த வழக்கில் சம்பந்தப்பட்டு இருக்கிறவர்கள் ஒருவர்  பிரமாண வாக்குமூலத்தை தாக்கல் செய்து இருக்கிறார். அப்படி  தாக்கல் செய்தவர் யார் என்று சொன்னால் ?

அந்த மாநிலத்தில் இருக்கின்ற முக்கியமான ஆர்எஸ்எஸ்-சில் இருக்கிற  ஒருவர்தான் அதை தாக்கல் செய்து இருக்கிறார். அதுல என்ன சொல்லி இருக்கிறார் ? ஆமாம் நாங்கள் வெடிகுண்டு செய்த போது வெடித்தது உண்மைதான், எங்களுக்கு ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாமில் வெடிகுண்டு செய்வதற்கு பயிற்சி கொடுக்கிறார்கள், வெடிகுண்டு செய்வதற்கு எங்களுக்கு சோதனை நடத்துகிறார்கள், வெடிகுண்டு எப்படி செய்வது ?  வெடிகுண்டை எப்படி வெடிக்க வைப்பது ? எப்படி பாதுகாப்பாக எடுத்துச் செல்வது ? எல்லாவிதமான பயிற்சியையும் எங்களுக்கு ஆர்எஸ்எஸ் கூடாரத்தில் சொல்லிக் கொடுக்கிறார்கள்.

அதையெல்லாம் முறையாக செய்யாத காரணத்தினால் தான் இந்த வெடிகுண்டு வெடிக்கிற போது எங்களிலே 2 பேர் இறந்து போய் விட்டார்கள் என்று அந்த நீதிமன்றத்தில் சொல்லியிருக்கிறார். அதுமட்டுமல்ல காஷ்மீரில் எங்கே எல்லாம் வெடிகுண்டு வைத்தோம், மும்பையில் எங்கெல்லாம் வெடிகுண்டு வைத்தோம், இந்த நாட்டில் வெடிகுண்டு எங்கெங்கெல்லாம் வைக்கப்பட்டது என்கின்ற விவரங்களை எல்லாம் சொல்லி, இதற்கெல்லாம் வேறு யாரும் பொறுப்பு கிடையாது. நாங்கள் தான் இந்த வெடி குண்டை வைத்தவர்கள் என்று பகிரங்கமாக ஒத்துக் கொண்டிருக்கிறார்.

நான் மோடியை பார்த்து கேட்கிறேன்.. உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பார்த்து கேட்கிறேன்… இப்படி நீதிமன்றத்திலே பயங்கரவாத குண்டு வெடிப்பு காரணம் நாங்கள்தான் என்று ஒரு அமைப்பு பிரமாண வாக்குமூலத்தை தாக்கல் செய்த பிறகு, நீங்கள் முதன் முதலில் இந்த நாட்டில் அமைதியை பாதுகாக்க வேண்டுமானால், ஆர்எஸ்எஸ்யை அல்லவா தடை செய்திருக்க வேண்டும், ஆர்எஸ்எஸ் மீது தானே தடை போட்டு இருக்க வேண்டும், ஆர்எஸ்எஸ் தலைவர்கள் தானே கைது செய்து சிறையில் அடைத்திருக்க வேண்டும். ஆனால் அவர்களை எல்லாம் பகிரங்கமாக விட்டுவிட்டீர்கள்.

பெரிய வெட்கக்கேடு என்னவென்று சொன்னால் ? வெடிகுண்டு தயாரித்து வெடிகுண்டு வைத்து மக்களை அமைதியாக கொல்லக்கூடிய ஆர்எஸ்எஸ் உடைய தலைமை பிரச்சாரகர் இந்த நாட்டினுடைய பிரதமராக இருக்கின்ற நரேந்திர மோடி. அவருடைய அடுத்த முக்கியமான தலைவர் அமித்ஷா. மத்தியில் இருக்கின்ற அவ்வளவு பேரும் ஆர்எஸ்எஸ்காரர்கள். மாநிலங்களில் ஆளுநராக இருக்கின்ற அவ்வளவு பெரும் ஆர்எஸ்எஸ்காரர்கள். ஆர்எஸ்எஸ்காரர் கவர்னராக இருக்கலாம், ஆர்எஸ்எஸ்காரர் அரசுக்கு ஆலோசகராக இருக்கலாம், ஆர்எஸ்எஸ் அமைப்பை சார்ந்தவர்கள் பிரதமராக இருக்கலாம். ஆனால் வேறு பல அமைப்பை பயங்கரவாதம் என்று நடவடிக்கை எப்படி தடை செய்வது என்பது தான் எங்களுக்கு புரியவில்லை என தெரிவித்தார்.

Categories

Tech |