ஆசிய கோப்பை 2022 இறுதிப்போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் பாகிஸ்தான் அணியுடன் மோதி இலங்கை அணி வெற்றி பெற்றது. இந்த இறுதி போட்டியை காண பாகிஸ்தான் இலங்கை மட்டுமல்லாது மற்ற நாட்டு கிரிக்கெட் ரசிகர்களும் குவிந்தனர்.
இந்நிலையில் இந்தியன் கிரிக்கெட் ரசிகர்கள் துபாய் ஸ்டேடியத்தில் நுழையும்போது இந்தியன் ஜெர்சி அணிந்திருந்த காரணத்தினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் அல்லது இலங்கை ஜெர்சி அணிந்து வாருங்கள் இந்தியன் ஜெர்சியுடன் உள்ளே அனுமதிக்க முடியாது என்று தடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து பாரத் ஆர்மி மற்றும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ட்விட்டரில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
😡 SHOCKING TREATMENT as The Bharat Army and other Indian Cricket Fans told they can not enter the stadium wearing ‘India jerseys’! #BharatArmy #PAKvSL pic.twitter.com/5zORYZBcOy
— The Bharat Army (@thebharatarmy) September 11, 2022