ரோஷ்னி ஹரிப்ரியன் மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ”பாரதிகண்ணம்மா” சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் ரோஷ்னி ஹரிப்ரியன்.
சமீபத்தில் இவர் இந்த சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும் இவருக்கு பட வாய்ப்புகள் வந்த காரணமாகவே இந்த சீரியலிலிருந்து விலகியதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், சமூக வலைதளப்பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில், தற்போது மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.