ரோஷ்னி ஹரிப்ரியனுக்கு நிறைய படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல்களில் ஒன்று ”பாரதி கண்ணம்மா”. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியல் டி.ஆர்.பி.யிலும் முன்னிலை வகித்து வருகிறது. இந்த சீரியலில் பாரதியும் கண்ணம்மாவும் எப்போது இணைவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
சமீபத்தில், இந்த சீரியலில் இருந்து ரோஷ்னி ஹரிப்ரியன் சில காரணங்களால் விலகினார். இந்நிலையில், இவருக்கு நிறைய படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘ஜெய் பீம்’ படத்தில் செங்கேணி வேடத்தில் மற்றும் சார்பட்டா பரம்பரை படத்தில் ‘மாரியம்மா’ கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததாக கூறப்படுகிறது.