பாரதிகண்ணம்மா சீரியலில் இருந்து முக்கிய கதாபாத்திரம் விலக இருப்பதாக தெரியவந்துள்ளது.
பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்று வருகிறது. குறிப்பாக இந்த சீரியலில் இடம்பெற்றிருக்கும் கண்ணம்மா கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்நிலையில் இந்த சீரியலில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ஸ்வீட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த சீரியலில் நடித்துவரும் அகிலனை டாக் செய்து இனி இதுபோன்ற எடிட்டிங்கை மிஸ் செய்வோம் என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவினை பார்க்கும்போது ஸ்வீட்டி அல்லது அகிலன் யாரோ ஒருவர் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகப் போகிறார் என்று தெரிகிறது.