பாரதிகண்ணம்மா சீரியல் நடிகர் மீண்டும் படப்பிடிப்பில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகியுள்ளது. மேலும் டிஆர்பி ஏதும் முன்னணி வகித்து வருகிறது.
இந்த சீரியலில் நடித்து வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அந்தவகையில் இந்த சீரியலில் அகிலன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் கடந்த சில நாட்களாக இந்த சீரியலில் வரவில்லை. இந்நிலையில் அவர் மீண்டும் பாரதிகண்ணம்மா படப்பிடிப்பில் இணைந்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.