பாரதிகண்ணம்மா சீரியல் நடிகர் முன்னணி நடிகையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் இடம்பெற்றுள்ள கண்ணம்மா கதாபாத்திரம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் இச்சீரியலில் பாரதியின் தம்பியாக நடித்து வருபவர் அகிலன்.
இவர் சீரியல்களில் மட்டுமல்லாமல் சில படங்களிலும் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில் பிரபல முன்னணி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உடன், அகிலன் நிகழ்ச்சி ஒன்றில் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் ஏராளமான லைக்குகளை குவித்து வருகின்றனர்.