தயாரிப்பாளர் சுவாமிநாதன் இறந்தது குறித்து இயக்குனர் பாரதிராஜா தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுவாமிநாதன் நேற்று கொரோனா தொற்றால் மரணமடைந்தார். இவரின் மரணம் குறித்து திரையுலகினர் தங்கள் இரங்கலை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் இயக்குனர் பாரதிராஜா விடுத்துள்ள இரங்கல் செய்தியில் “என் மகிழ்ச்சியை சில நேரங்களில் உங்களிடம் பகிர்ந்து உள்ளேன். அதே போல எனது துக்கங்களை பகிரும் கட்டாயமும் ஏற்பட்டது.
லட்சுமி மூவி மேக்கர்ஸ் ஒரு நல்ல கம்பெனி, 3 தயாரிப்பாளர்கள். “கண்களால் கைது செய்” என்ற படத்தை இவர்களின் தயாரிப்பில் இயக்கியுள்ளேன். இந்நிலையில் என் பாசத்திற்கும், நட்பிற்கும் உரிய சுவாமிநாதன் கொரோனா தொற்றின் காரணமாக இயற்கையை எழுதியுள்ளார். இச்செய்தி என்னை மிகப்பெரிய துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த குடும்பத்திற்கு எப்படி ஆறுதல் கூறுவது என்று தெரியவில்லை. இருப்பினும் ஒரு நல்ல நண்பரையும், தயாரிப்பாளரையும் இழந்த துக்கம் எனக்கு உள்ளது. அவரின் குடும்பத்திற்கும், குடும்பத்தை சேர்ந்தவருக்கும் எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று கூறியுள்ளார்.