பாரதிகண்ணம்மா சீரியல் நாயகன் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் இச்சீரியல் டி.ஆர்.பி யிலும் முன்னணி வகித்து வருகிறது. குறிப்பாக இந்த சீரியலில் நடித்து வரும் கண்ணம்மா கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்நிலையில் பாரதிகண்ணம்மா சீரியலில் பாரதியாக நடித்து வரும் நடிகர் அருண் பிரசாந்த் இந்த சீரியலுக்காக ஒருநாளைக்கு வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. கம்யூனிகேஷன் படித்து முடித்த அருண்பிரசாத் அதன்பிறகு மாடலிங் துறையில் பணியாற்றி வந்துள்ளார்.
இதை தொடர்ந்து அவருக்கு மேயாதமான் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவே அதன் மூலம் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தியதால் அவருக்கு பாரதி கண்ணம்மா சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் அவர் தற்போது இந்த சீரியலுக்காக ஒரு நாளைக்கு 20 ஆயிரம் சம்பளம் பெற்று வருகிறார் என்றும் தெரியவந்துள்ளது.