Categories
சினிமா தமிழ் சினிமா

மது கிடைக்காத விரக்தி… நடிகை மனோரமாவின் மகன் தற்கொலை முயற்சி!

மறைந்த நடிகை மனோரமாவின் மகன் திடீரென்று தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காட்டு தீயைப்போல வேகமாக பரவி வருவதன் காரணமாக இந்தியா முழுவதும் வரும் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மளிகை கடைகள், பால், இறைச்சி உட்பட அத்தியாவாசியப் பொருள்கள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதில் மதுபான கடைகளும் அடங்கும்.. இதனால் மது கிடைக்காமல் மதுவுக்கு அடிமையான மது பிரியர்கள் விபரீதமான முடிவுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில் மறைந்த நடிகை மனோரமாவின் மகன் பூபதி நீண்ட நாள்களாக மீண்டும் மதுவுக்கு அடிமையாகி இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளும்  மூடப்பட்டுள்ளதால், மன உளைச்சலில் இருந்துள்ளார் பூபதி. இதையடுத்து திடீரென்று நேற்று இரவு, பூபதி தூக்க மாத்திரை சாப்பிட்டதையடுத்து அவருக்கு வலிப்பு ஏற்பட்டது.
பின்னர் உடனடியாக அவரது உறவினர்கள், ஆயிரம் விளக்கு பகுதியில் இருக்கும் அப்பல்லோ தனியார் மருத்துவமனையில் சிகிசைக்காக அவரை அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்ட  பிறகு தற்போது நலமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்தசம்பவம் குறித்து மாம்பலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |