Categories
தேசிய செய்திகள்

புவனேஸ்வர் பெட்ரோலியம் நிறுவனங்கள் அதிரடி: முக கவசம் அணிந்தால் மட்டுமே பெட்ரோல் டீசல் வழங்கப்படும்

முக கவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களுக்கு பெட்ரோல் டீசல் வழங்கப்படாது என புவனேஸ்வர் பெட்ரோலிய நிறுவனங்கள் தெரிவித்துள்ளது

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இருந்தும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக முக கவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களுக்கு இனி டீசல், பெட்ரோல் கிடையாது என்று புவனேஸ்வர் பெட்ரோலிய நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இதுகுறித்து அந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் கூறியதாவது “கொரோனா வைரசை கட்டுப்படுத்த பெட்ரோல் பங்கிற்கு வரும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து தான் வரவேண்டும் இல்லையென்றால் அவர்களுக்கு டீசல் பெட்ரோல் போன்றவை வழங்க முடியாது. எங்களின் பணியாளர்களே உண்மையான ஹீரோக்கள். அவர்களை பாதுகாக்கவும் வாடிக்கையாளர்களின் நலன் கருதியும் இந்த முடிவை நாங்கள் எடுத்துள்ளோம்”

Categories

Tech |