Categories
உலக செய்திகள்

அமெரிக்க வெள்ளை மாளிகையில்… முதல் கறுப்பின செய்தி செயலாளர்…!!!

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் கரீன் ஜீன்-பியர் என்ற பெண் முதல் கருப்பின செய்தி செயலாளராக நியமிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்க வெள்ளை மாளிகையில் கரீன் ஜீன்-பியர் என்பவர் புதிதாக செய்தி செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இவர் செய்தி செயலாளர் உயர்ந்த பதவியில் இருக்கும் கறுப்பினத்தை சேர்ந்த முதல் நபர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் எல்ஜிபிடிகியூ என்ற பதவியில் அமரும் முதல் நபராகவும் இருக்கிறார்.

இதற்கு முன்பு பணியாற்றிய ஜென் சாகி என்பவருக்கு பதில் வரும் 13 ஆம் தேதி பதவி ஏற்க இருக்கிறார். ஜனாதிபதி ஜோ பைடன் இது பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் கரீன் ஜீன்-பியரின், திறமை, அனுபவம், ஒருமைப்பாடு போன்றவற்றை பாராட்டுகிறேன். அவரின் பணி நியமனத்தை அறிவிப்பது பெருமையாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |