சுவிட்சர்லாந்தில் பெய்த கனமழை காரணமாக குளங்கள் ஏரிகள் அனைத்தும் நிரம்பி ஆபத்தான சூழல் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக சுவிட்சர்லாந்தில் பெய்த கனமழை காரணமாக குளங்கள் ஏரிகள் அனைத்தும் நிரம்பி ஆபத்தான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் Biel ஏரியில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் கரையை உடைத்து தண்ணீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு கருதி வியாழக்கிழமையிலிருந்தே குடியிருப்புகளை விட்டு வெளியேற வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் விலை உயர்ந்த பொருள்களை இடமாற்றவும், மின் இணைப்புகளை துண்டிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Neuchatel ஏரி, Biel ஏரி இரண்டும் சனிக்கிழமை முதலே மொத்த கொள்ளளவை எட்டியுள்ளன நிலையில் மின்னிணைப்பானது பாதுகாப்பு கருதி துண்டிக்கப்பட்டுள்ளது.