நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல் படுத்தப் படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை ஆகஸ்ட் மாதம் தொடங்க அதிகம் வாய்ப்புள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இதையடுத்து அரசு முன்னரே எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கினால் பாதிப்பை கட்டுப்படுத்தலாம். ஒருவேளை கொரோனா உருமாற்றம் அடைந்தால் நிலைமை மிக மோசமாக இருக்கும், மீண்டும் முழு ஊரடங்குக்கு கூட வழி வகுக்கும் என எச்சரித்துள்ளது.