தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து கடந்த மாதம் முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. அதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். கடந்த சில நாட்களாக மழை மீண்டும் குறைந்துள்ளது. ஆனால் நேற்று முன்தினம் முதல் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் புதுக்கோட்டை, தஞ்சையில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு கனமழை முதல் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்றும், நாளையும் மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரித்துள்ளது.