தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் ஏப்ரல் 14ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் நீலகிரி, தேனி, ஈரோடு, தருமபுரி, சேலம், தி.மலை, விழுப்புரம், மதுரை, நெல்லை, குமரி உள்ளிட்ட 25 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. இடி மின்னலுடன் மழை பெய்யும் என்பதால் செல்போன், டிவி, பிரிட்ஜ் ஆகியவற்றை பயன்படுத்தவேண்டும் .மின்கம்பங்களில் கால்நடைகளை கட்டுவதைத் தவிர்க்கவும். அறுந்து கிடக்கும் மின் கம்பிகள் அருகே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.