தமிழக கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில் இன்று காலை முதலே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய தொடங்கியது. இந்நிலையில் அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 48 மணி நேரத்திற்கு பிறகு மாலை படிப்படியாக குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.