ஆதார் அட்டை மூலம் மத்திய அரசிடம் இருந்து கடன் தொகை வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, அனைத்து ஆதார் அட்டைதாரர்களுக்கும் மத்திய அரசு ரூ.4.78 லட்சம் கடன் கொடுப்பதாக அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த செய்தி முற்றிலும் போலியானது என்று PIB விளக்கம் அளித்துள்ளது. மேலும் இந்த செய்தியை மக்கள் யாருக்கும் பகிர கூடாது என்று இந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஆன்லைன் தளங்கள் மூலம் மோசடிகள் நடைபெறுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால் மக்கள் இத்தகைய மோசடிகளில் இருந்து கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரியான சந்தேகத்திற்கு இடமான மெசேஜ் வரும் போது மக்கள் https://factcheck.pib.gov.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம் அல்லது +918799711259 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் அளிக்கலாம் அல்லது [email protected] என்ற இமெயில் முகவரிக்கு உங்கள் சந்தேகங்களை தெரிவிக்கலாம் என PIB தெரிவித்துள்ளது.