Categories
தேசிய செய்திகள்

BIG ALERT: ஆதார் வைத்திருப்பவர்களுக்கு 4.78 லட்சம் கடன் உதவி…? மத்திய அரசு உண்மை தகவல்….!!!!

ஆதார் அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் மத்திய அரசு 4,78,000 கடன் வழங்குகிறது என்ற தகவல் இணையத்தில் வேகமாக பரவியது. இந்நிலையில் இந்த தகவல் வதந்தி என மத்திய அரசு மறுத்துள்ளது. இது போன்ற தகவல்களை மற்றவர்களுக்கு பொதுமக்கள் யாரும் அனுப்ப வேண்டாம் என்று மத்திய தகவல் பணியம் கேட்டுக் கொண்டது. மேலும் இந்த வதந்தியை நம்பி தனிப்பட்ட தங்களுடைய வங்கி கணக்கு விவரங்களை யாரோடும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் அறிவுத்தப்பட்டுள்ளது.

அதேபோன்று கடந்த ஆகஸ்ட் மாதத்திலும் தவறான செய்தி பரப்பப்பட்டது. ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு நான்கு லட்சத்து 78 ஆயிரம் கடன் வழங்கும் திட்டம் எதையும் மத்திய அரசு அறிவிக்கவில்லை என்று தெரிவித்துள்ளது. இதேபோன்று மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த வருடம் கூடுதல் அகவிலைப்படி ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் என்று போலியான சுற்றறிக்கை வாட்ஸ் அப்பில் பரப்பப்பட்டதாகவும் ஆனால் அது குறித்த எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்பதையும் தெளிவுபடுத்தி உள்ளதாக மத்திய தகவல் பணியகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |