Categories
தேசிய செய்திகள்

BIG ALERT: ஆபாச படங்கள்…. இனி இப்படி யாரும் பண்ணாதீங்க…. போலீஸ் பரபரப்பு அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே மோசடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதில் தினம்தோறும் ஏமாறுபவர்கள் பலரும் உள்ளனர்.அரசு என்னதான் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும் ஒரு சில சமயங்களில் தங்களையும் மறந்து பலரும் இந்த வலையில் சிக்கிக் கொள்கின்றனர். அதிலும் குறிப்பாக தற்போது புதுவித மோசடி ஒன்று நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அதாவது போலி கணக்குகள் தொடங்கி அதன் மூலம் பலரையும் வளைத்து பணம் பறிக்கும் சம்பவங்கள் நிகழ்கின்றன.

பெண்களின் பெயரில் போலி சமூக வலைத்தள கணக்குகளை தொடங்கி இணையவாசிகளிடம் ஆபாசமாக உரையாடி வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பெற்று மிரட்டும் மோசடிகள் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.இந்த மோசடி தொடர்பாக மும்பையில் மட்டும் 61 வழக்குகள் ஆகஸ்ட் மாதம் வரை பதிவு செய்யப்பட்டுள்ளது .இந்த குற்றத்தில் ஈடுபடுபவர்கள் ஹரியானா மற்றும் ராஜஸ்தான் பகுதியை சேர்ந்தவர்கள் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே போலி கணக்குகளை நம்பி இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் யாரையும் நம்பி ஏமாற வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |