இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அதன்படி கடன் திட்டங்களையும், சிறந்த சலுகைகளையும் வழங்கி வருகிறது. இந்நிலையில் SBI வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி டிஜிட்டல் பேங்கிங் முறையில் நீங்கள் பயன்படுத்தாத சேவைகளை disable செய்து வைக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
Yono அப்ளிகேஷனில் ஒவ்வொரு சேவையையும் தனித்தனியாக நிறுத்தி வைக்கும் சேவை உள்ளது. குறிப்பாக டெபிட் கார்டுகளில் ஸ்வைப் செய்யும் சேவை, பன்னாட்டு சேவை, Tap செய்யும் சேவை என எதை வேண்டுமானாலும் on அல்லது off செய்து வைத்துக் கொள்ளலாம். உங்களுக்கு தேவையானதை மட்டும் on செய்து வையுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளது.