Categories
தேசிய செய்திகள்

BIG ALERT: இந்த வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஆபத்து…. திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான எச்டிஎஃப்சி வங்கி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது எச்டிஎஃப்சி வங்கி வாடிக்கையாளர்கள் குறி வைக்கப்பட்டு சில மோசடியால் பாதிக்கப்பட்டு வருவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த மோசடியில் வங்கி வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் அல்லது ஈமெயில் மூலமாக ஒரு லிங்க் அனுப்பப்படும். அதில் பயனாளி பான் கார்டு தகவல்களை அப்டேட் செய்ய அறிவுறுத்தப்படும். அதன்மூலமாக வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கு விபரங்கள் திருடப்பட்டு அவர்களின் பணம் எளிதில் கொள்ளை அடிக்கப்படுகிறது.

இந்த மோசடி Phishing என்று அழைக்கப்படுகிறது. இந்த நிலையில் மோசடியில் சிக்காமல் இருக்க வாடிக்கையாளர்களுக்கு எச்டிஎஃப்சி வங்கி எச்சரித்துள்ளது. அதாவது இந்த மோசடியில் இருந்து தப்பிக்க சில அறிவுரைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது.

அதன்படி உறுதிப்படுத்தப்படாத மற்றும் அடையாளம் தெரியாதவர்கள் அனுப்பும் எஸ்எம்எஸ் மற்றும் ஈமெயில் எதுவாக இருந்தாலும் அதற்கு பதில் அளிக்க வேண்டாம். அவற்றை அப்படியே டெலிட் செய்து விடுங்கள். அதனை பிளாக் செய்வதும் நல்லது. மேலும் எந்த ஒரு தகவலையும் தெரிந்து கொள்வதற்கு வங்கியின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தை பார்க்க வேண்டும். E-Mail மூலமாக வரும் இணையதள இணைப்பில் Spelling சரி பார்க்க வேண்டும். உதாரணமாக hdcf bank என்ற பெயர்களில் மோசடிக் கும்பல்கள் அனுப்புவதாக கூறப்படுகிறது. எனவே இது போன்ற மோசடிகளில் சிக்காமல் வாடிக்கையாளர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |