இணையதளங்களில் ஆபாச படங்களை வெளியிடுவதும் சமூக வலைத்தளங்களில் வக்கிர பதிவுகளை பதிவிடுவதும் தொழில்நுட்ப சட்டம் 2000இன் படிமூன்று ஆண்டுகள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க தகுந்த குற்றங்கள் ஆகும் என்ற மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜூவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இணையதளத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஆபாச படங்களை வெளியிடுவதை தடுப்பது காவல்துறையின் பொறுப்பாகும் எனவும் அவர் கூறியுள்ளார். காவல்துறை மாநில அரசின் கீழ் வருவதால் மாநில அரசுக்கு இந்த குற்றங்களை தடுக்கும் கடமை உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.